சமீபத்தில் அமெரிக்காவின் நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி) இரட்டை முகக்கவசம் அணிவது கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்புவதற்கான சிறந்த வழி என்று அறிவித்துள்ளது.
ஆனால் சிலருக்கு இரட்டை முகக்கவசங்கள் அணிவது பாதுகாப்பானதா? இதனை எந்த சமயங்களில் பயன்படுத்த வேண்டும் என்ற சந்தேகம் காணப்படும்.
இதுகுறித்து ஆய்வுகள் கூறுவது என்ன? இவை பாதுகாப்பானதா என்று பார்ப்போம்.
ஆய்வு கூறுவது என்ன?
ஒரு முகக்கவசம் அணிந்திருந்தால், பரவும் வைரஸ் துகள்களில் 40 சதவீதம் தடுக்கப்பட்டிருக்கிறது. அதுவே இரண்டு முகக்கவசம் அணிந்திருந்தபோது 80 சதவீத துகள்கள் தடுக்கப்பட்டிருக்கிறது.
அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் சர்ஜிக்கல் முகக்கவசத்தை முதலில் அணிந்துவிட்டு அதன் மீது துணியிலான முகக்கவசம் அணிவது சிறப்பானது என்றும் பரிந்துரைக்கிறார்கள்.
சாதாரண முகக்கவசங்களைவிட அதிக அடுக்குகள் கொண்ட முகக்கவசங்கள் அணிவது கிருமிகள் ஊடுருவலை தடுக்க உதவும். நொய்த்தொற்றுவில் இருந்தும் பாதுகாக்கும் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.
இவை பாதுகாப்பானதாக இருக்குமா?
தாங்கள் அணியும் முகக்கவசத்தின் தரம், வைரஸ்கள், கிருமிகளை கட்டுப்படுத்தும் தன்மை பற்றி உறுதியாக தெரியவில்லை என்றால் இரட்டை முகக்கவசம் அணிவது பாதுகாப்பானது.
ஒரு முறை பயன்படுத்திவிட்டு குப்பையில் வீசப்படும் முகக்கவசங்களையே ஒன்றன் மீது மற்றொன்றாக சேர்த்து அணியக்கூடாது.
சர்ஜிக்கல் முகக்கவசம் மீது துணியால் தயாரிக்கப்பட்ட முகக்கவசம் அணியலாம். அது வைரஸ்கள் உள் நுழையும் இடைவெளியை குறைக்கும். பாதுகாப்பான உணர்வையும் கொடுக்கும்.
எந்த சமயங்களில் அணிவது நல்லது?
- பொது போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்கள்
- மோசமான காற்றோட்டம் உள்ள இடங்கள்
- கொரோனா வைரஸ் பரவல் உள்ள பகுதிகள் அதற்கான சிகிச்சை அளிக்கப்படும் இடங்கள்
குறிப்பு
இரட்டை முகக்கவசம் அணிவது பாதுகாப்பானது . ஒரு முககவசம் அணிந்தாலும், வைரஸ்களிடம் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். ஆனால் மூக்கை முழுமையாக மூடாமல் இருப்பது, தளர்வான முகக்கவசங்களை அணிவது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.