தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் மணப்பெண் ஒருவர் திருமணக்கோலத்தில் பாரம்பரிய கலைகளை ஆடிய ருசிகர சம்பவம் நடந்துள்ளது.
தூத்துக்குடியின் நடுக்கூடுடன்காடு கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகள் நிஷா, இவருக்கும் ராஜ்குமார் என்பவருக்கும் திருமணம் நடந்து முடிந்தது.
பின்னர் தேமாங்குளத்தில் திருமண ஊர்வலம் நடந்தது. அப்போது மணப்பெண் நிஷா பாரம்பரிய கலைகளான சுருள் வாள் வீச்சு, சிலம்பம் ஆகியவற்றை ஆடி அசத்தினார்.
அவர் தனது இரு கைகளிலும் சிலம்பத்தை பிடித்து லாவகமாக சுழற்றியபோது, அங்கு கூடியிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
இதுகுறித்து நிஷா, சிறுவயதிலேயே சிலம்பம் கற்றுக்கொள்ள தனக்கு ஆர்வம் இருந்ததாகவும், தன்னுடைய தாயும் ஊக்கமளித்ததால் சிலம்பம், ஒயிலாட்டம், சுருள்வாள், களரி போன்ற கலைகளை கற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னுடைய திருமண ஊர்வலத்தில் பாரம்பரிய கலைகளை ஆடியதில் மகிழ்ச்சி எனவும் தெரிவித்துள்ளார்.
![](https://www.theevakam.com/wp-content/uploads/2021/07/HGK.jpg)