வெளிநாடுகளில் இருந்து பிரான்சிற்கு வருகை சுற்றுலா பயணிகளுக்கான கொரோனா பரிசோதனை கட்டணம் பற்றி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக, உலகின் பல நாடுகளில் கொரோனா பரிசோதனை சான்றிதழ், அதாவது அதை PCR முடிவுகள் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அதன் படி ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு செல்லும் போது, கொரோனா பரிசோதனை சான்றிதழ் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், பிரான்ஸ் அரசின் பேச்சாளர், வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் சுற்றுலாப்பயணிகளுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ள கட்டணம் குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து Gabriel Attal வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த கோடை காலத்தில் வெளிநாடுகளில் இருந்து பிரான்சுக்கு சுற்றுலா வரும் பயணிகள் அனைவருக்கும் கட்டணத்துடன் கூடிய PCR முடிவுகள் மேற்கொள்ளப்படும்.
இதற்கு 49 யூரோக்கள் கட்டணமாக அறவிடப்படும் என்று, இந்த புதிய நடைமுறை வரும் ஜூலை 7 ஆம் திகதியில் இருந்து நடைமுறையில் இருக்கும் என குறிப்பிட்டார்.