முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாளைய தினம் முக்கியமான அறிவிப்பை வெளியிட உள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸமில் தெரிவித்துள்ளார்.
பிட்டகோட்டேயில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியின் விசேட மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரதம அதிதியாக கலந்து கொள்ள உள்ளதுடன் முக்கியமான அறிவிப்பை வெளியிடஉள்ளார்.
மேற்குலக சக்திகள் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் தேவைக்கு அமைய 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி நடந்த ஆட்சி மாற்றத்திற்கு எதிராக நாட்டின் இடது, தேசியவாத சக்திகளுடன் இணைந்து முதல் வேட்டை விமல் வீரவங்ச தீர்த்தார்.
அன்று பலர் ஓடி ஒழிந்த போதும் தேசிய சுதந்திர முன்னணி நாட்டின் சரியான நோக்கதுடன் தேசிய சுதந்திர முன்னணி அரசியலில் ஈடுபட்டது.
நல்லாட்சி அரசாங்கம் பொய்களை கூறி, தமது மேற்குலக எஜமானர்கள் மற்றும் இந்தியாவின் தேவைகளை நிறைவேற்றி வருகின்றதே தவிர நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் கடந்த இரண்டு ஆண்டுகளில் எதனையும் செய்யவில்லை.
இதனால், சரியான நோக்கத்தில் இருந்து செயற்படும் தேசிய சுதந்திர முன்னணி, கூட்டு எதிர்க்கட்சி ஆகியவற்றுக்கு மாத்திரமல்லது தொழில் முனைவோர், ஊடகவியலாளர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் மீது அரசாங்கம் அச்சம் கொண்டுள்ளது.
இதன் காரணமாக அரசாங்கம் இவர்கள் அனைவருக்கு எதிராகவும் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது எனவும் மொஹமட் முஸ்ஸமில் குறிப்பிட்டுள்ளார்.