Loading...
சுவிட்ஸர்லாந்து சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பிய பின்னர், அமைச்சரவையில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படவிருப்பதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை கடந்த காலங்களில் சர்ச்சைகளுக்கு காரணமாக அமைந்த சில முக்கிய அமைச்சர்களின் துறைகள் மாற்றப்படலாம் எனக் கூறப்படுகிறது.
Loading...
மேலும் அமைச்சர்களின் பதவிகளில் மாற்றங்கள் செய்யும் முன்னர் இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமர் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய அமைச்சர்கள் எடுத்த முடிவுகள் காரணமாக அரசாங்கம் அதிருப்திக்கு உள்ளாகி, மக்கள் சிரமங்களை எதிர்நோக்க நேரிட்டதால், குறித்த அமைச்சர்களுக்கு எதிராக அரசாங்கத்திற்குள் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Loading...