2017-ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி வரும் 30-ம் தேதி மும்பையில் நடைபெறுகிறது. உலகில் உள்ள பல நாடுகளை சேர்ந்த அழகியர் பங்கேற்கும் இந்த போட்டியில் இந்தியாவின் சார்பில் ரோஷ்மிதா ஹரிமூர்த்தி கலந்து கொள்கிறார்.
கடந்த 1994-ம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவில் நடைபெற்ற பிரபஞ்ச அழகி போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்று அழகிப் பட்டத்தை தட்டிசென்ற சுஷ்மிதா சென், மும்பையில் நடைபெறவுள்ள பிரபஞ்ச அழகி போட்டியின் நடுவர்களில் ஒருவராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
23 ஆண்டுகளுக்கு முன்னர் பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்று, வெற்றிபெற்று, தற்போது பிரபஞ்ச அழகி போட்டியை இந்தியாவில் நடத்தும் விழாவின் உரிமையாளராக, இந்த தேர்வு குழுவில் இடம்பெற்றுள்ள வாய்ப்பை எண்ணி மகிழ்ச்சியும், பெருமையும் கொள்வதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுஷ்மிதா சென்(41) குறிப்பிட்டுள்ளார்