நடிகர் விஜய் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வாய்ஸ் தந்தார். அதன் பின் நடிகர் சங்கம் போராட்டம் நடத்த ஏற்பாடு செய்த்து. அந்த போராட்டத்தை தவிர்க்குமாறு போராட்டக்காரர்கள், நடிகர்களுக்கும், மீடியாக்களுக்கும் வேண்டுகோள் வைத்தனர்.
அஜித்துக்கும் நடிகர் சங்க போராட்டத்தை புறக்கணித்து மெரீனாவுக்கு வாருங்கள் என்று அவரின் ரசிகர்கள் உட்பட எல்லோரும் சொல்லிய போதிலும், அவர் நடிகர் சங்க போராட்டத்தில் பங்கேற்றார்.
சூர்யா கொஞ்சம் காரியக்காரர் இல்லையா? அங்கேயும் அட்டெண்டென்ஸ் இங்கேயும் அட்டெண்டென்ஸ் போட்டு, சிங்கம்3 க்கு எந்த பாதிப்பும் வராமல் பார்த்துக்கொண்டார்.
விஜய், நடிகர் சங்க போராட்டத்திற்கு வரவில்லை. மெரினாவில் போராட்டத்தில் பங்கேற்றவர், தான் யார் என்று தெரியாமல் இருக்க எப்படி ஸ்கார்ப் கட்டி ஏர்போர்ட்டில் வருவாரோ, அது போல வந்து கலந்துகொண்டார்.
நேற்று இரவில் வந்து, இரவு முழுவதும் மாணவர்களோடு களத்தில் இருந்து தன்னை மற்றவர்கள் அடையாளம் காணாதபடி விடியும் முன்பே திரும்பி சென்று… மக்களின் தன் எழுச்சி போராட்ட களத்தில் நடிகர்கள் எப்படி பங்கேற்று இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாய் இருந்தார் எங்கள் தளபதி, தளபதி தாண்டா என்று விஜய் ரசிகர்கள் பெருமிதம் கொண்டு உள்ளனர்.