மிகப்பெரிய உள்நாட்டுத் தொடரான ரஞ்சிக் கோப்பை தொடர், வரும் நவம்பர் 16ம் தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்தியாவில் 2021-22ம் ஆண்டில் நடைபெறும் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களுக்கான அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 12ம் தேதி மகளிர் ஒருநாள் லீக் தொடருடன் இந்த ஆண்டின் உள்நாட்டு சீசன் தொடங்குகிறது. அதன்பின்னர் அக்டோபர் 20ம் தேதி உள்நாட்டு டி20 லீக் தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடர் தொடங்குகிறது. இதன் இறுதிப்போட்டி நவம்பர் 12ம் தேதி நடைபெற உள்ளது.
இதேபோல் மிகப்பெரிய தொடரான ரஞ்சிக் கோப்பை தொடர், வரும் நவம்பர் 16ம் தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி வரை நடைபெற உள்ளது.
50 ஓவர் லீக் தொடரான விஜய் ஹசாரே கோப்பை தொடர், பிப்ரவரி மாதம் 23ம் தேதி தொடங்கி மார்ச் 26ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த சீசனில் அனைத்து ஆடவர், மகளிருக்கான தொடர்களில் மொத்தம் 2127 ஆட்டங்கள் நடைபெற உள்ளன.
அனைவரின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து, உள்நாட்டு சீசன் போட்டிகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்படும் என பிசிசிஐ நம்பிக்கை தெரிவித்துள்ளது.