பிலிப்பைன்ஸில் 85 பேருடன் பயணித்த இராணுவ விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
sulu மாகாணத்திலே இந்த கோர விபத்து நடந்துள்ளது.
Cagayan de Oro-வில் இருந்து இராணுவ வீரர்களை ஏற்றி வந்த பிலிப்பைன்ஸ் இராணுவத்திற்கு சொந்தமான C130 விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளது.
Jolo விமானநிலையில் ஓடுபாதையில் தரையிறங்க வேண்டிய விமானம், Patikul நகரில் உள்ள கிராமத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்துள்ளது.
C130 விமானம் விபத்துக்குள்ளானதை பிலிப்பைன்ஸ் இராணுவ தளபதி Cirilito Sobejana உறுதிப்படுத்தியுள்ளார்.
கிட்டதட்ட 40 பேர் மீட்கப்பட்டு Jolo-வில் உள்ள இராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக Sulu இராணுவத் தளபதி மேஜ்ர் ஜெனரல் William Gonzales தெரிவித்துள்ளார்.
விபத்துக்குள்ளான விமானம் தீப்பற்றி எரியும் நிலையில், தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளனர்.
மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் 17 பேர் பலியானதாகவும், விமானத்தில் மொத்தம் 92 பேர் பயணித்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.