அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகையில் நடந்த விழாவில் பதவி ஏற்றார்.
துணை ஜனாதிபதியாக பென்ஸி பதவி ஏற்றார். இருவருக்கும் அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
புதிய ஜனாதிபதியாக பதவேற்ற பின் முதல் வேலையாக டொனால்டு டிரம்ப் தனது மனைவி மெலானியா டிரம்புடன் மேடையில் சில நிமிடங்கள் நடனமாடி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
பின்னர் டிரம்ப் பேசுகையில்,
அமெரிக்காவை மேலும் வலுப்படுத்துவதே தனது நோக்கம் என கூறினார்.
மேலும், எல்லையைப் பாதுகாக்க முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும்
அதிகாரம் மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படும் என கூறிய டிரம்ப் இது மக்களின் வெற்றி.
உங்களின் வலி எனது வலி, அரசின் வெற்றி உங்கள் வெற்றி. நமக்கு வருங்காலங்களில் சவால்கள் காத்திருக்கின்றன.
கடினமான சூழலை தாண்டியும் நாம் வெற்றி பெறுவோம் டிரம்ப் என சூளுரைத்தார்.
அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பு பாதுகாக்கப்படும் என கூறிய அவர், எல்லா விடயத்திலும் அமெரிக்காவே முன்னிறுத்தப்படும் என கூறியுள்ளார்.
எனது மூச்சுக்காற்று முழுக்க அமெரிக்கர்கள் நலனே நிறைந்துள்ளது. அமெரிக்காவின் பழைய பெருமைகளை நான் நிச்சயம் மீட்டெடுப்பேன் என உணர்ச்சி பொங்க அவர் கூறியுள்ளார்.