அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்ட பிறகு பிரித்தானியா தெருவில் இரண்டு நபர்கள் மோதிக்கொண்டு வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிரம்ப் ஜனாதிபதியாக பதவி ஏற்றதை அடுத்து அமெரிக்காவில் ஆர்ப்பாட்டக்காரர்கள், வாகனங்களுக்கு தீ வைத்து பயங்கர வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதே சமயம் பிரித்தானியாவிலும் வன்முறை சம்பவம் இடம்பெற்றுள்ளது. டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்றது தொடர்பாக இரண்டு ஆண்கள் லண்டன், ஆக்ஸ்போர்டு தெருவில் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இருவரும் தங்களின் அரசியல் நம்பிக்கைக்காக வெளிப்படைபயாக மோதிக்கொண்டதாக கூறப்படுகிறது.
சம்பவயிடத்தில் இருந்த நபர் ஒருவர் இருவரும் மோதிக்கொண்டதை புகைப்படமாக எடுத்து வெளியிட்டுள்ளார். உண்மையில், உலகம் முன்னெப்போதையும் விட இப்பொழுது இன்னும் அதிகமாக பிரிக்கப்பட்டுள்ளது என ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.