தயாரிப்பாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இந்தியன் 2 திரைப்படம் கிடப்பில் இருக்கும் நிலையில், பிரபல நடிகர் இயக்குனர் ஷங்கரை நேரில் சந்தித்துள்ளார்.
பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வந்தது. தயாரிப்பாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், இப்படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதற்கிடையில் தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகவும், இந்தியில் ரன்வீர்சிங் நடிப்பில் அந்நியனை ரீமேக் செய்வதாகவும் ஷங்கர் அறிவித்தார்.
இந்நிலையில், நடிகர் ராம் சரண் மற்றும் தயாரிப்பாளர் தில் ராஜு ஆகியோர் சென்னை வந்து இயக்குனர் ஷங்கரை சந்தித்துள்ளனர். இவர்கள் கூட்டணியில் உருவாகும் புதிய படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாக இருக்கிறது. இவர்கள் மூன்று பேரின் திடீர் சந்திப்பு, புதிய படம் பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் நாயகியாக கியாரா அத்வானி நடிக்க இருப்பதாகவும், தமன் இசையமைக்க இருப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளது.