தற்போதைய அரசாங்கம் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட அனுமதித்தால் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சீன நாட்டவர் கூட வேட்பாளராக மாற முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த செவ்வியில் இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கான முடிவு ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரு முடிவாகும்.
எனினும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த கட்சிகள் இந்த விடயத்தில் மாறுபட்ட கருத்துக்களை கொண்டிருக்கலாம். ஆகையினால் யார் வேண்டுமானாலும் ஜனாதிபதி வேட்பாளராக முடியும்.
தற்போதைய அரசாங்கம் இரட்டை குடியுரிமையை கொண்டவர்களை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட அனுமதித்தால் ஒரு சீன நாட்டவர் கூட அடுத்த தேர்தலில் வேட்பாளராக முடியும்.
இந்த நிலையில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஒரு பொதுவான வேட்பாளரை நிறுத்த வேண்டிய அவசியம் அரசியல் யதார்த்தங்களால் தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.