Loading...
ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் 28 பேருடன் காணாமல் போயிருந்த ஏ.என்-26 பயணிகள் விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானம் தரையிறங்க திட்டமிடப்பட்ட 10 நிமிடங்களுக்கு முன்னர், பலானா விமான நிலையத்திலிருந்து 9 கிலோ மீற்றர் தொலைவில் நேற்று (06) செவ்வாய்க்கிழமை பயணித்துக்கொண்டிருந்த போது குறித்த விமானம் தொடர்பை இழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
Loading...
விமானத்தில் 22 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில், பயணித்த எவரும் உயர்த்தப்பியிருக்க வாய்ப்பில்லை என கருதப்படுகின்றது.
Loading...