யூரோ கோப்பை கால்பந்தின் மற்றொரு அரையிறுதியில் இங்கிலாந்து – டென்மார்க் அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்துகின்றன.
16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டி விட்டது.
இதில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்த முதலாவது அரையிறுதிப் போட்டியில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள இத்தாலி, 6-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயினை எதிர்கொண்டது.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் போடவில்லை.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 60-வது நிமிடத்தில் இத்தாலி அணியின் பெட்ரிகோ சிய்சா முதல் கோலடித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஸ்பெயின் வீரர் அல்வாரோ மொராட்டா 80வது நிமிடத்தில் பதில் கோல் அடித்தார். இறுதியில், இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.
கூடுதல் நேரம் வழங்கியும் இரு அணிகளின் கோல் போடும் முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் 4-2 என்ற கோல் கணக்கில் இத்தாலி அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டிக்கு இத்தாலி அணி முன்னேறியது.