பிரான்சில் கைக்குழந்தையை இரண்டு நாய்கள் சேர்ந்து கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு பிரான்சின் Saint-Aubin பகுதியில் தாய் ஒருவரும், 14 மாதக் குழந்தையும் இருந்துள்ளனர்.
அப்போது சாலையிலிருந்து Rottweiler வகை நாய் ஒன்று அவர்கள் இருந்த இடத்துக்கு வேகமாக வந்ததுடன் குழந்தையை கடித்து குதறத் தொடங்கியது.
செய்வதறியாது தாய் திகைத்து நிற்க, மற்றொரு நாயும் சேர்ந்து கொண்டு குழந்தையை கடித்துக் குதறியது.
இந்த தாக்குதலில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துவிடவே, அருகில் இருந்த நபர் ஒருவர் நாயை சுட்டுக் கொன்றுள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் சட்டத்தின் படி Rottweiler, Staffordshires, Pitbulls போன்ற அபாய வகை நாய்கள் வைத்திருக்க அனுமதி வாங்கவேண்டியது அவசியமாகும்.
அனுமதி வாங்காமல் வளர்பவர்களுக்கு €750 என்ற அளவு அபராதம் விதிக்கப்படும். அதே போல நாய்கள் யாரையாவது கடித்து அவர்கள் உயிரிழந்தால் ஐந்து வருட சிறை தண்டனையுடன் €75,000 அபராதம் விதிக்க கூட அந்நாட்டு சட்டத்தில் இடமுள்ளது குறிப்பிடத்தக்கது.