அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் கோலாகலமாக நடந்த விழாவில் பதவியேற்று கொண்டார்.
இந்த பதவியேற்பு விழாவில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.
அதில் முக்கியமாக எல்லோராலும் கவனிக்கப்பட்டவர் ஹிலாரி கிளிண்டன் தான்.
காரணம் ஜனநாயக கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப்பை எதிர்த்து தேர்தலில் ஹிலாரி தோல்வியடைந்தார்.
இந்நிலையில் டிரம்ப் பதவியேற்பு நிகழ்வுக்கு தன் கணவர் பில் கிளிண்டனுடன் வந்திருந்தார்.
ஹிலாரி அரங்கில் நுழையும் போதிலிருந்தே ஒரு வித இறுக்கமான முகத்துடனே இருந்தார்.
டிரம்பை எப்படி எதிர்கொள்ள போகிறோம் என்ற யோசனையில் அவர் இருந்ததை அவர் முகமே காட்டியது.
பின்னர் மக்கள் கூட்டத்தை பார்த்ததும் அவர் சகஜ நிலைக்கு மாறினார்.
முக்கியமாக தேர்தல் பிரசாரத்தில் ஹிலாரியை மோசமான பெண் என்றும் அவரை நான் சிறையில் அடைப்பேன் எனவும் பேசி பரபரப்பை ஏற்ப்படுத்திய டொனால்டு டிரம்ப் ஹிலாரியை எப்படி நடத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.
பின் வரிசையில் உட்கார்ந்திருந்த ஹிலாரியிடன் சென்ற டிரம்ப் நீங்கள் இங்கு வந்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது என கூறினார்.
பின்னர் பில் கிளிண்டனையும் டொனால்டு டிரம்ப் கவுரவித்தார்.