தமிழ் சினிமாவில், சென்னை 28 படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. இவர் இயக்குனர் அகத்தியன் மகளும் ஆவார்.
பிக்பாஸ் சீசனிலும் கலந்துகொண்டவர். இதையடுத்து, சமூக வலைத்தளங்களில் எப்போதும் தன்னை ஆக்டிவாக வைத்திருப்பவர்.
சினிமா அப்டேட்டுகள் முதல் குடும்ப புகைப்படங்கள் வரை அனைத்தையுமே தனது சமூக வலைத்தள பக்கங்கள் மூலமாக தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில், சமீபத்தில் நடிகை விஜயலட்சுமி அவரது மகனுடன் புகைப்படம் எடுத்ததை வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படத்தில் அவரது மகனுக்கு உதட்டோடு முத்தம் கொடுத்திருந்தார்.
சமூக வலைதள பக்கத்தில் பதிவிடப்பட்ட இந்த புகைப்படத்திற்கு சில வலைதள வாசிகள் அவரை மோசமாக விமர்சித்து வந்தனர்.
இதனால், மோசமான வார்த்தையால் கமெண்ட் செய்த ரசிகர் ஒருவரை விஜயலட்சுமி “ஓ.. கொழந்த கிட்ட பண்ண வேண்டிய அட்டூழியங்கள் னு ஒரு fantasy list வெச்சு இருக்கியா. பரதேசி இத பாத்த உடனே bulb எரியுதா.
நீங்க எல்லா நேர்ல வந்து பேசுங்க டா.அழுக்கு ஜென்மங்கள்.இதுல அப்பாடக்கர் மாதிரி tweets. இது கூட சேந்து discuss பண்ண இன்னோரு எச்ச. அடேய் aprasidingala” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், நாளுக்கு நாள் சமூக வலைதளங்களில் பிரபலங்களுடன் ரசிகர்கள் சண்டை போடுவது வாடிக்கையாகிவிட்டது.
ரசிகர்களும் எல்லை மீறி பேசி விடுகின்றனர். இதனால் கோபப்படும் பிரபலங்களும் எல்லை மீறி பேசி விடுகின்றனர்.
இதனைத்தொடர்ந்து, தாய்மை பற்றிய இந்த பதிவில் தவறாக பேசியவர்களைக் கண்டிக்க வேண்டும் எனும் அளவுக்கு விஜயலட்சுமியின் ரசிகர்கள் இணையத்தில் கொந்தளித்து திட்டி தீர்த்து வருகின்றனர்.
[Mummay… I love you ..