கொழும்பில் வழமைக்கு மாறாக அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் வெறிச்சோடிக் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏனைய நாட்களில் பெருமளவு வாகனங்கள் நிறைந்து காணப்படும் எரிபொருள் நிலையங்களில நேற்று ஒரிரு வாகனங்கள் மாத்திரமே வருகைத்தந்ததாக எரிபொருள் நிலைய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
தினசரி நீண்ட வரிசையில் வாகனங்கள் காணப்படும் எரிபொருள் நிலையங்கள் உட்பட பல வெறுமையாக காணப்பட்டுள்ளதனை அவதானிக்க முடிந்துள்ளது. இதற்கான உரிய காரணம் அறியவில்லை என எரிபொருள் நிலைய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் பசில் ராஜபக்ஷ அமைச்சு பதவியை பெற்றுக்கொண்டதன் பின்னர் எரிபொருளின் விலைகள் குறைக்கப்படும் என முன்னர் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் நேற்றையதினம் நிதியமைச்சராக பசில் ராஜபக்ஷ பதவியேற்றுக்கொண்டார். இதனையடுத்து எரிபொருளின் விலைகள் குறைக்கப்படும் என்ற நம்பிக்கையில் சாரதிகள் எரிபொருளை பெற்றுக்கொள்ளவில்லை என எரிபொருள் நிலைய ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.