Loading...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் மாகாண முதலமைச்சர்களுக்கும் இடையில் இன்று முற்பகல் விசேட சந்திப்பொன்று நடைபெற்றது.
இந்த சந்திப்பில் 6 மாகாணங்களின் முதலமைச்சர்கள் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடமத்திய மாகாண ஆளுநர் பேஷல ஜயரத்ன இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை.
Loading...
அத்தியாவசியமான பணி காரணமாக தன்னால், சந்திப்பில் கலந்து கொள்ள முடியவில்லை என வடமத்திய மாகாண முதலமைச்சர் தெரியப்படுத்தியுள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் சம்பந்தமாக இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...