ரஷ்யாவும் சீனாவும் அணு ஏவுகணைகள் முதலான ஆயுதங்களை தயாரித்துவருவதாக தெரிவித்துள்ள அமெரிக்க பாதுகாப்புத்துறையின் ஆவணம் ஒன்று, உலகம் அணு ஆயுதப்போருக்கு தயாராவதாக எச்சரித்துள்ளது.
அமெரிக்க பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள ஆவணம் ஒன்று, ரஷ்யாவும் சீனாவும் கடந்த பத்து ஆண்டுகளாக தங்கள் அணு ஆயுதங்களை நவீனமயமாக்கி வருவதுடன் அதிகரித்துக்கொண்டும் இருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும், வடகொரியா, அமெரிக்காவைத் தாக்கும் அளவுக்கு திறன்கொண்ட ஏவுகணைகளை சோதனை செய்வதை அதிகரித்துள்ளது.
ஈரானோ, நினைத்தால் ஒரே ஆண்டுக்குள் உடனடியாக அணு ஆயுதம் ஒன்றை உருவாக்கும் தொழில்நுட்பத்தைக் கையில் வைத்திருக்கிறது.
ஆக, உலகின் பல பாகங்களில் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் எதிரிகள் இருப்பதாகவும், நாடுகளுக்குள் பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில் அணு ஆயுதப்போர் உருவாகும் அபாயம் உள்ளதாகவும் எச்சரித்துள்ளது அமெரிக்க பாதுகாப்புத்துறையின் ஆவணம்.