தவறி கீழே விழுந்த தன் தாயின் உயிரை தன் சமயோஜித புத்தியால் காப்பாற்றிய சிறுவனின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியா நாட்டின் Telford நகரில் Gemma என்றும் பெண் தன் மகன் Jacob (4) உடன் வசித்து வந்தார்.
ஜேக்கப்பால் சரியாகவும், தெளிவாகவும் பேச இயலாது. இந்நிலையில் தன் வீட்டு சமையலறையில் Gemma வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென தவறி தரையில் விழுந்துள்ளார்.
தரையில் அவரின் தலை வேகமாக மோதியதால் மயக்கமடைந்துள்ளார். உடனே அருகிலிருந்த அவரின் மகன் Jacob தன் தாயை எழுப்ப முயல அவரால் எழுந்திருக்க முடியவில்லை.
உடனே 999 என்ற அவசர உதவி எண்ணுக்கு Jacob போன் செய்து தன் தாய்க்கு ஏற்ப்பட்டுள்ள நிலையை தன் மழலை மொழியில் கஷ்டப்பட்டு விளக்கியுள்ளான்.
பின்னர் சம்பவம் நடந்த இடத்துக்கு வந்த அவசர உதவி பிரிவு ஆட்கள் Gemma – ஐ தூக்கி கொண்டு போய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தற்போது அவருக்கு சிகிச்சையளிக்கட்டு வருவதுடன், அவர் உயிருக்கு ஆபத்தில்லை எனவும் தெரிகிறது.
இது பற்றி Gemma கூறுகையில், என் மகன் தான் என் ஹீரோ. என் உயிரையே அவன் காப்பாற்றியுள்ளான். அவனை நினைத்தால் எனக்கு பெருமையாக உள்ளது என கூறியுள்ளார்.