டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த 120க்கும் மேற்பட்ட வீரர்கள் தகுதிப் பெற்றுள்ளனர்.
மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் 8-ந்தேதி வரை நடக்கிறது.
இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த 120க்கும் மேற்பட்ட வீரர்கள் தகுதிப் பெற்றுள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
வில்வித்தை, தடகளம், பேட்மின்டன், குத்துச் சண்டை, குதிரையேற்றம், வாள்வீச்சு, கோல்ப், ஜிம்னாஸ்டிக், ஜூடோ, துடுப்பு படகு, பாய்மரப் படகு, துப்பாக்கி சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், பளு தூக்குதல், மல்யுத்தம் ஆகிய 18 விளையாட்டுகளில் இந்தியா பங்கேற்கிறது.
இந்த நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்கள்- வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி 13-ந்தேதி கலந்துரையாடுகிறார்.
அன்று மாலை 5 மணிக்கு காணொலி காட்சி மூலம் நடைபெறும் கலந்துரையாடலில் வீரர்கள்- வீராங்கனைகளுடன் மோடி பேசுகிறார். அப்போது அவர்களை ஊக்கப்படுத்த உள்ளார்.
மேலும் ஒலிம்பிக்கில் பதக்கங்களை வெல்ல வீரர்கள் – வீராங்கனைகளுக்கு வாழ்த்தும், ஆதரவும் தெரிவிக்கிறார்.