அரச அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களின் நியாயமான போராட்டங்களை தடுக்கும் அரசாங்கத்தின் செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாக தென்னிலங்கையின் பௌத்த தேரர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு மக்களின் நியாயமான போராட்டங்களை தடுப்பதால், இதற்கான இழப்பீட்டை எதிர்காலத்தில் அரசாங்கம் செலுத்த வேண்டியிருக்குமெனவும், அமைதியான முறையில் ஆட்சி செய்ய முடியாவிடின், பதவி விலகுமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிற்கு குறித்த தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேவால்ஹிந்த அஜித தேரர் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டுள்ள தேரர் ஒருவர் பேஸ்புக்கில் காணொளி ஒன்றை வெளியிட்டு அரசாங்கத்திடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
குறித்த காணொளியில் கருத்து வெளியிட்ட அவர்,
இந்த மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் கோட்டாபய அவர்களுக்கெதிரானது மாத்திரம் அல்ல. வரலாற்றை எடுத்துக்கொண்டால் அனைத்து நாடுகளிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன.
இந்த ஆர்பாட்டங்களின் போது செயற்படும் விதம் ஒன்று உள்ளது. இவ்வாறு செயற்படுவதால் இது பெரிய பிரச்சினையாக மாறும்.
வரலாற்றில் நடந்த இரத்த கலவரங்களுக்கு மீண்டும் இடமளிக்க வேண்டாமென, ஆட்சியாளர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.