Loading...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த வாரம் சில முக்கிய அரசியல் முடிவுகளை எடுக்க உள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
களுத்துறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி எடுக்க உள்ள இந்த அரசியல் முடிவுகள் மக்களுக்கு பலன் தரக்கூடியதாக இருக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Loading...
இதனிடையே அடுத்த சில தினங்களில் அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படலாம் என அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் மத்தியில் அதிருப்தியை சம்பாதித்துள்ள அமைச்சர்கள் சிலர் தற்போது வகித்து வரும் பதவிகளை இழக்கக் கூடும் எனவும் தெரியவருகிறது.
Loading...