Loading...
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் பொதுமக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக ஜல்லிக்கட்டு ரத்து செய்யப்பட்டது. பொதுமக்களை சமரசம் செய்ய இயலாத அதிருப்தியுடன் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மதுரை மாவட்ட கலெக்டர் மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசன நடத்தினார்.
பின்னர், மதுரையில் இருந்து இன்று பிற்பகல் விமானம் மூலம் சென்னை வந்த தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
Loading...
அவசர சட்டத்தின் மூலம் ஜல்லிக்கட்டுக்கான தடை முற்றிலுமாக நீங்கியுள்ளதாக குறிப்பிட்ட அவர், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சட்ட முன்வரைவு (மசோதா) நாளை சட்டசபையில் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Loading...