மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது வளர்ப்பு மகன் ஜெயராமனுக்கு ரூபாய் 75 கோடி செலவில் திருமணம் செய்து வைத்துள்ளார்.
இந்த திருமணமானது மிகப்பெரிய திருமண வரவேற்பு என்ற பெயரில் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
50 ஏக்கர் அளவிலான இடத்தில் இந்த பிரமாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது.
இதில், 1.50.000 பேர் கலந்துள்ளனர். திருமணத்திற்கு வந்தவர்களுக்கு உணவு பரிமாறப்படும் இடத்திற்கான செலவு மட்டும் 1.5 கோடி. மற்றும் உணவு செலவு 2 கோடியாம்.
மேலும், திருமண இடத்திற்கு முன் ஒரு 5 கிலோமீட்டர் நீளத்திற்கு அலங்கார, கலை வேலைப்பாடுகள் செயப்பட்டிருந்தனவாம். இதில் ரோஜா இதழ்கள் அலங்காரம், பழம்பெரும் சிலை வடிவ மாதிரி அமைப்புகள் என ஏராளமான அலங்கார வேலைபாடுகள் செய்யப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
கின்னஸ் சாதனை! பெயர்: ஜெயலலிதா ஜெயராம்.
சாதனை: பெரிய திருமண வரவேற்பு.
பங்கேற்றவர் எண்ணிக்கை: 1,50,000 பேர்.
இடம்: மெட்ராஸ், இந்தியா. நாள்: செப்டம்பர் 7, 1995.