வாட்ஸ்அப் உருவாக்கி வரும் புது அம்சம் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
வாட்ஸ்அப் செயலியில் புகைப்படங்களை அனுப்பும் அம்சத்தில் புதிய மாற்றம் செய்யப்படுகிறது. இன்னும் முழுமை பெறாத நிலையில், இந்த அம்சம் முதற்கட்டமாக பீட்டா பதிப்பில் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் செயலியில் புகைப்படங்களை அனுப்பும் போது மூன்று ஆப்ஷன்களை வழங்குகிறது.
இதுவரை வாட்ஸ்அப் செயலியில் அனுப்பப்படும் புகைப்படங்களின் தரம் தானாக குறைக்கப்பட்டு விடும். விரைவில் இந்த நிலை மாற இருக்கிறது. வாட்ஸ்அப் பீட்டா v2.21.14.16 பதிப்பில் இந்த புது அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சத்தை பயனர்கள் Storage — Data மெனுவில் உள்ள Photo Upload Quality ஆப்ஷன்களை க்ளிக் செய்து இயக்க முடியும்.
முந்தைய ஆப்ஷன்களை க்ளிக் செய்ததும் ஆட்டோ, பெஸ்ட் குவாலிட்டி மற்றும் டேட்டா சேவர் என மூன்று தரங்களில் புகைப்படங்களை அனுப்ப வாட்ஸ்அப் வழி செய்கிறது.
ஆட்டோ (Auto): ஒவ்வொரு புகைப்படத்திற்கும் சிறந்த தேர்வை வாட்ஸ்அப் கண்டறிந்து அனுப்பும்
பெஸ்ட் குவாலிட்டி (Best Quality): அதிக தரமுள்ள புகைப்படத்தை வாட்ஸ்அப் அனுப்பும்
டேட்டா சேவர் (data saver): புகைப்படங்களின் அளவை குறைத்து, அதிவேகமாக அனுப்பும். இவ்வாறு செய்யும் போது புகைப்படத்தின் தரம் குறைந்துவிடும்.
அதிக தரமுள்ள புகைப்படங்களை அனுப்புவது மட்டுமின்றி, வீடியோக்களிலும் இதேபோன்ற அம்சத்தை முந்தைய பீட்டாவில் வாட்ஸ்அப் வழங்கி இருந்தது. இரு அம்சங்களும் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகின்றன. விரைவில் இவை வாட்ஸ்அப் ஸ்டேபில் வெர்ஷனில் வழங்கப்படும் என தெரிகிறது.