அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவியேற்றுள்ளார். தேர்தல் பிரசாரத்தின் போது பிரபல சமூகவலைதளமான ட்விட்டரை டிரம்ப் பெரிதும் பயன்படுத்தி கொண்டார்.
தற்போது அவர் ஜனாதிபதி ஆகியுள்ளதால் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் @POTUS என்ற ட்விட்டர் ஐடி கணக்கு டிரம்ப் கைக்கு வந்துள்ளது.
ஒபாமாவுக்கு @POTUS44 என்ற ஐடி தரப்பட்டுள்ளது.
இந்நிலையில், ட்விட்டரில் இருப்பவர்கள் டொனால்டு டிரம்பை நிச்சயம் பாலோ செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்தபடுவதாக புகார்கள் எழுந்தன.
தற்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவ்வாறு நடந்துள்ளது என தெரியவந்துள்ளது.
இது குறித்து ட்விட்டரின் நிறுவனர் ஜாக் கூறுகையில், தற்போது நடைபெற்ற ஆய்வில் இந்த விடயம் தொழில் நுட்ப கோளாறு காரணமாக நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இது ட்விட்டர் பயனாளிகள் 560,000 பேரை பாதித்துள்ளது. தெரியாமல் நடந்தாலும் அது தவறு தான். நான் அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இனி இவ்வாறு நடக்காது என அவர் கூறியுள்ளார்
டொனால்டு டிரம்ப்க்கு ஏற்கனவே @realDonaldTrump என்ற அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு உள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக தான் பொறுப்பேற்றதும் அந்த ஐடியிலிருந்து, நமது எல்லைகள் நமக்கும் மீண்டும் வரும், அதே போல நம்மை விட்டு போன வேலைகளும் திரும்ப நமக்கே வரும் என்ற டிவீட்டை டிரம்ப் முதலில் பதிவேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.