கிளிநொச்சி திருவையாறு பிரதேசத்தில், பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் முன்னாள் போராளியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட கராளசிங்கம் குலேந்திரன் என்பரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காப்புறுதி நிறுவனமொன்றில் பணியாற்றிவந்த இவர் கடந்த வாரம் வெளியில் சென்றிருந்தபோது பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டதாக பின்னர் அறியக்கிடைத்துள்ளது. அத்தோடு, அவர் தற்போது வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகள் ஒருபுறம் மர்மமாக உயிரிழப்பதும் மறுபுறம் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்படுவதும் தொடர்கதையாகியுள்ள நிலையில், நல்லாட்சி அரசாங்கத்தின் இச் செயற்பாடு அவர்களிடத்தில் அச்சத்தை மட்டுமன்றி விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளதென தெரிவிக்கப்படுகிறது.