நடிகை அனுபமா பரமேஸ்வரன் தான் காதல் தோல்வி அடைந்துள்ளதாக வெளியிட்டுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்வலையினை ஏற்படுத்தியுள்ளது.
மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் கவர்ந்த அனுபமா பரமேஸ்வரன், தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் நடித்துள்ளார்.
ஆனால் தமிழில் சரிவர வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு சினிமா பக்கம் சென்று படுபிஸியாக நடித்து வருகின்றார்.
நீண்ட நாட்களுக்கு பின்பு மீண்டும் தமிழில் அதர்வாவுடன் தள்ளிப்போகாதே என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் அனுபமா பரமேஸ்வரன் தன்னை ஒருவர் காதலித்து ஏமாற்றி விட்டதாகவும், தற்போது யாரையும் காதலிக்கவில்லை எனவும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இப்பதிவு தற்போது சலசலப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனுபமா பரமேஸ்வரன் பிரபல தயாரிப்பாளர் மகனும் நடிகருமான ஒருவரை காதலித்து வந்ததாகவும் அவருடன் இரவு நேரங்களிலும் வெளிநாடுகளிலும் ஊர் சுற்றி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியது.
தற்போது அந்த நடிகர் தான் நடிகை அனுபமாவை ஏமாற்றிவிட்டாரோ என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.