கடந்த 21ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக அவரது மெய்ப்பாதுகாவலரால் நபரொருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பான வழக்கு இன்று மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது சந்தேகநபரான மெய்ப்பாதுகாவலரை எதிர்வரும் 26ஆம் திகதிவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த சந்தர்ப்பத்தில், மட்டக்களப்பு பொலிஸாரின் அசமந்த போக்கு காரணமாக வழக்கில் ஆட்சேபனை இருப்பதாகவும், அவர்களுடைய விசாரணையில் திருப்தி இன்மை காரணமாக வழக்கினை தகுந்த ஒரு பொலிஸ் பிரிவுக்கு வழங்குமாறு உயிரிழந்தவரின் தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் குறித்த வழக்கினை பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு சென்று வழக்கினை பிரிதொரு பிரிவுக்கு கொடுப்பதற்கு உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை குறித்த வழக்கினை அடுத்த மாதம் 26ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.