கொரோனாவை எதிர்த்து போராடும் ஏழை நாடுகளுக்கு உதவுவதாக கனேடிய அரசு திங்கட்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
சுமார் 17.7 மில்லியன் ஆக்ஸ்போர்டு – அஸ்ட்ராஜெனேகா கோவிட்-19 தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு இலவசமாக தரவுள்ளதாக கனேடிய பெடரல் அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும் உதவி செய்வதற்காக, கனேடிய குடிமக்களிடமிருந்து நிதி திரட்டி உலக நாடுகளுக்கு நன்கொடை வழங்குவதாகவும் உறுதி அளித்துள்ளது.
அனைத்து கனேடிய மாகாணங்களுடன் பேசி, தடுப்பூசிக்கான தேவை பூர்த்தி செய்யப்பட்டப்பின், உபரியாக இருக்கும் COVID-19 அளவுகளை ஏழை நாடுகளுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் திங்கட்கிழமை தெரிவித்தார்.
உலக சுகாதார அமைப்பின் ‘கோவாக்ஸ்’ திட்டம் மூலம் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு இந்த தடுப்பூசி அளவுகள் கிடைக்கும் என்று ஆனந்த் கூறுனார். அதற்கான நேரத்தை விரைவில் அறிவிப்பதாகவும் கூறினார்.
கனடாவில் செப்டம்பர் மாத இறுதிக்குள் 44 மில்லியன் மாடர்னா தடுப்பூசிகள் மற்றும் 51 மில்லியன் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிகள் இறங்குமாதி ஆக உள்ளதாக அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்தார்.
அதில், 68 மில்லியன் தடுப்பூசிகள் ஜூலை மாத இறுதிக்குள் கனடாவிற்கு வந்து இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.