கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த மருத்துவனையில் ஆக்சிஜன் டேங்க் வெடித்ததால் 50 நோயாளிகள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக் நாட்டின் தலைநகரம் சிரியாவில் உள்ள அல் ஹூசைன் மருத்துவமனையில் தான் இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் 70 படுக்கைகள் கொண்ட புதிய வார்டு தொடங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வார்டில் 63 நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மீதம் உள்ள நோயாளிகளில் நிலவரம் என்ன என்பது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது
இந்த தீ விபத்தை அடுத்து உடல் கருகி பலியானவர்களின் உறவினர்கள் மருத்துவமனை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மருத்துவமனையை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தியதில், பொலிசாருக்கும், பொதுமக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பொலிசாரின் வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளன.
நிலையின் விபரீதத்தை உணர்ந்து, மருத்துவமனையின் தலைமை நிர்வாகியை கைது செய்ய பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.