Loading...
அன்றாடம் நாம் பற்களை துலக்கும் போது, எவ்வளவு தரம் வாய்ந்த டூத் பேஸ்டுகளை பயன்படுத்தினாலும், ஒரு நாளைக்கு இரண்டு வேளைகள் பற்களை துலக்குவது மிகவும் அவசியமாகும்.
அத்துடன் நமது பற்களின் உட்பகுதியின் இடுக்குகளில் இருக்கும் அழுக்குகளை போக்குவதற்கு, மென்மையான பஞ்சு இழைகளை நூல் போன்று செய்து, அதை பற்களின் இடையில் விட்டு எடுக்க வேண்டும்.
Loading...
இதேபோல் தொடர்ந்து செய்த பின் பற்களை நன்றாக துலக்கி, ஆயில் புல்லிங் செய்ய வேண்டும். இதனால் நமது பற்களில் சொத்தை மற்றும் ஈறு பிரச்சனைகளும் வராமல் தடுக்கலாம்.
பற்களை சுத்தம் செய்யா விட்டால் ஏற்படும் பிரச்சனைகள்
- பஞ்சு இழைகளை பயன்படுத்தி பற்களை தினமும் சுத்தம் செய்யாவிட்டால், நமது ஈறுகள் பலவீனம் அடைந்து, ஈறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுகிறது.
- தினமும் பஞ்சைக் கொண்டு சுத்தம் செய்யாமல் இருந்தால், நமது பற்களில் இடுக்குகளில் கெட்ட பாக்டீரியாக்கள் நுழைந்து, வாயில் புண்களை ஏற்படுத்துகிறது.
- பற்களில் மென்மையான பஞ்சை பயன்படுத்தி சுத்தம் செய்து விட்டு, பற்களை துலக்காமல் இருந்தால் கூட, அசுத்தம் நிறைந்த மூச்சுக் காற்று வெளிப்பட்டு, கெட்ட நாற்றத்தையும் உண்டாக்குகிறது.
- நாம் தினமும் பற்களை சுத்திகரிக்காமல் இருந்தால், அதன் தொற்றுக்கள் நமது நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்தி, நிம்மோனியா பிரச்சனையை ஏற்படுத்துகிறது.
- கர்ப்பிணி பெண்களின் அசுத்தமான பற்களினால், அவர்களின் வயிற்றில் இருக்கும் சிசுவிற்கும் இந்த பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
- ஆண்களுக்கு, அவர்களின் பிறப்புறுப்பில் விறைப்புத் தன்மை போன்ற பிரச்சனைகள் கூட ஏற்படுகிறது. மேலும் இதனால் ஆண்மை குறைபாடுகள் ஏற்படுவதற்கு கூட வாய்ப்புள்ளது.
- பற்களின் சுகாதாரம் குறைவாக இருந்தால், தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் புறுநோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றது.
Loading...