Loading...
திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (15) 12 மணித்தியால நீர் விநியோகம் தடைசெய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் திருகோணமலை மாவட்ட அலுவலகம் அறிவித்துள்ளது.
Loading...
அதற்கமைய, கிண்ணியா, தம்பலகாமம், திருகோணமலை நகர், நிலாவெளி, ஆண்டாங்குளம், பாலையூற்று ,சீனக்குடா ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் நாளை இடம்பெறாது.
திருகோணமலை – கண்டி பிரதான வீதி, முள்ளிப்பொத்தானை பகுதியில் உள்ள பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்டுள்ள கசிவினால் இந்த நிலை ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
Loading...