பப்புவா நியூ கினியா மற்றும் சொலமன் தீவுகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அமெரிக்க பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
பப்புவா நியூ கினியாவின் ஆர்வா என்ற பகுதியில் பூமிக்கு அடியில் சுமார் 167 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து பப்புவா நியூகினியா, இந்தோனேஷியா, நவ்ரூ, மற்றும் சொலமன் தீவு கடலோரப் பகுதிகளில் அடுத்த மூன்று மணித்தியாலங்களுக்கு பாரிய அலை எழுச்சி ஏற்படலாம் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. எனினும் அவுஸ்திரேலியாவுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என அவுஸ்திரேலிய சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்து எவ்வித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.