கடந்த சில வருடங்களாகவே ஸ்டார் ஹீரோக்களுடன் ஜோடி போடுவதை தவிர்த்து ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள வேடங்களில் மட்டுமே நடித்து வருகிறார் நயன்தாரா.
ஆனால் நடிகர் விஷாலுடன் மீண்டும் நயன்தாரா நடிக்க உள்ளதாக சமீபகாலமாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே இந்த ஜோடி சத்யம் படத்தில் கடந்த 2008ம் ஆண்டு இணைந்து நடித்திருந்தது.
புதிய படத்தை பிரம்மம் பட இயக்குனரும், கமல்ஹாசனின் உதவியாளருமான சோகிரேட்ஸ் இயக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.
இதுபற்றி விஷாலிடம் கேட்டபோது, ‘இதுபோன்ற செய்திகள் எங்கிருந்து வெளிவருகிறது என்று தெரியவில்லை. தற்போது துப்பறிவாளன், இரும்பு திரை, சண்டகோழி 2ம் பாகம் என 3 படங்கள் நடிக்க உள்ளேன். இதை தவிர்த்து வேறு புதிய படம் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை’ என்றார்.
இதற்கிடையில் விஷால் நேற்று பொலிஸ் ஆணையாளர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்திருக்கிறார். அதில் தனக்கு தொலைபேசியில் அறிமுகம் இல்லாத சிலர் மிரட்டல் விடுக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டிருக்கிறார்.