ஜல்லிக்கட்டுக்கு அவசரசட்டம் கொண்டுவருவதற்காக முதல்வர் பன்னீர் செல்வம் டெல்லி சென்றபோது, விமானத்தில் வைத்து இளம்பெண்ணுடன் செல்பி எடுத்துக்கொண் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் இயற்ற வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடியை, முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கடந்த 19 ஆம் திகதி டெல்லியில் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பிற்கு கிடைத்த பலனாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டுவரப்பட்டபோதிலும், நிரந்தர சட்டம் கொண்டுவரும் வரை நாங்கள் போராட்டத்தை கைவிடமாட்டோம் என கூறியுள்ளனர்.
இந்நிலையில், பன்னீர் செல்வம் டெல்லி சென்றபோது விமானத்தில் வைத்து இளம்பெண் ஒருவருடன் சேர்ந்து செல்பி எடுத்துள்ள புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பன்னீர் செல்வத்தின் இந்த புகைப்படத்தை பார்த்து சமூகவலைதளவாசிகள் கொந்தளித்து வருகின்றனர். ஆனால் இந்த புகைப்படம் தற்போது எடுப்பட்டதுதானான என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.