திருமணமாகி 16 ஆண்டுகளுக்கு பின் குழந்தை பெற்றுள்ள சஜி – சங்கீதா தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
மலையாளத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான ‘இவ விவஹிதரயால்’ என்கிற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சஜி சுரேந்திரன். இவர் இதையடுத்து ஹாப்பி ஹஸ்பண்ட்ஸ், ஃபோர் பிரண்ட்ஸ், குஞ்சலியன், ஷீ டாக்ஸி போன்ற படங்களை இயக்கி பிரபலமானார். இயக்குனர் சஜி கடந்த 2005-ம் ஆண்டு சங்கீதா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், சஜி – சங்கீதா தம்பதிக்கு தற்போது இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து சமூக வலைதளத்தில் இயக்குனர் சஜி வெளியிட்டுள்ள பதிவில், “சில நேரங்களில் அற்புதங்கள் இரட்டிப்பாக வரும். இரட்டை குழந்தை பிறந்துள்ளது. கடவுளுக்கு நன்றி” என தெரிவித்துள்ளார். திருமணமாகி 16 ஆண்டுகளுக்கு பின் குழந்தை பிறந்துள்ளதால், இத்தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.