Loading...
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள நடுக்குடா பகுதியில் அமைக்கப்பட்ட நடுக்குடா காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தினை வியாழக்கிழமை (15) மாலை 4.30 மணியளவில் அமைச்சர் டலஸ் அழகப்பெரும வைபவ ரீதியாக திறந்து வைத்ததோடு, அதன் பணிகளை பார்வையிட்டார்.
மன்னார் -தலைமன்னார் பிரதான வீதி நடுக்குடா பகுதியில் அமைக்கப்பட்ட குறித்த மின் உற்பத்தி நிலையமே இவ்வாறு வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
மின் சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், கே.திலிபன் ஆகியோர் இணைந்து வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.
Loading...
இதன் போது அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்கள்,அமைச்சின் செயலாளர்கள் உற்பட பலர் கலந்து கொண்டனர்.
சுகாதா நடை முறைகளுக்கு அமைவாக குறித்த நிகழ்வு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...