ஹீரோயின்கள் தங்கள் வயதை வெளியில் சொல்வதில்லை. உண்மையான வயது தெரிந்தால் ரசிகர்களிடம் தங்களுக்குள்ள ஈர்ப்பு குறைந்துவிடும் என்ற எண்ணமும் இதற்கு காரணம். படங்களில் கூட மனைவி வேடங்களை தவிர்த்து காதலியாக மட்டுமே நடிக்க முயல்கின்றனர்.
திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்து ஓய்ந்தபிறகு மார்க்கெட் இழக்கும் நிலையில் மனைவி, அம்மா வேடங்களில் நடிக்க முன்வருகின்றனர்.
வயதான வேடங்களில் நடிப்பது பற்றி நடிகை ஸ்ரேயாவிடம் கேட்டபோது, சினிமாவோடு வேறு எந்த தொழிலையும் ஒப்பிட முடியாது. 17 வயது முதல் நான் நடித்து வருகிறேன். இப்போது 34 வயதாகிறது.
எந்த வயதாக இருந்தாலும், ஏன் 65 வயதானாலும் சினிமாவில் மட்டும் தான் நல்ல வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. அமிதாப்பச்சனுக்கு இந்த வயதிலும் அருமையான வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது.
இதே வேறு தொழிலாக இருந்தால் ஏதாவது செய்ய அனுமதிப்பார்களா என்பது சந்தேகமே. நடிகையாக இருப்பதற்கு நான் ஆசிர்வதிக்கப்பட்டிருப்பதாகவே கருதுகிறேன்- என்றார்.