லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் உருவாகும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது.
கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘விக்ரம்’. இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. இந்த படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது.
இந்த நிலையில் விக்ரம் படப்பிடிப்பில் கலந்து கொண்டது குறித்து கமல்ஹாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். மேலும் ‘விக்ரம்’ படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின்போது ஒரு உயர் நிலை பள்ளியில் மீண்டும் இணைந்தது போல உணர்ந்தேன். கடந்த 50 ஆண்டுகளில் நான் திரைப்பட படப்பிடிப்பில் இருந்து விலகி இருந்த மிக நீண்ட காலம் இதுதான். நான் மட்டுமின்றி பல திரைப்பட தயாரிப்பாளர்கள் கிட்டத்தட்ட ஒரு வருடமாக எந்தவித படப்பிடிப்பையும் நடத்தவில்லை.
எங்கள் நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் படப்பிடிப்பில் பணிபுரிய விக்ரம் படக்குழுவினர் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன் என்று கமல் பதிவு செய்துள்ளார்.