டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 18 விளையாட்டுகளில் 68 பிரிவில் பங்கேற்கிறது. 71 வீரர்கள், 56 வீராங்கனைகள் ஆக மொத்தம் 127 பேர் கலந்து கொள்கிறார்கள்.
உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. கடைசியாக 2016-ம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோவில் நடந்தது. 2020-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. கொரோனா வைரஸ் காரணமாக இந்த போட்டி ஒரு ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது.
அதன்படி ஒலிம்பிக் போட்டி வருகிற 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை டோக்கியோவில் நடக்கிறது. கொரோனா பாதிப்பு காரணமாக பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 18 விளையாட்டுகளில் 68 பிரிவில் பங்கேற்கிறது. 71 வீரர்கள், 56 வீராங்கனைகள் ஆக மொத்தம் 127 பேர் கலந்து கொள்கிறார்கள். பயிற்சியாளர்கள், அதிகாரிகள் என மொத்தம் 222 பேர் டோக்கியோ செல்கிறார்கள்.
முதல்குழு இன்று ஜப்பான் புறப்பட்டு செல்கிறது. ஏற்கனவே பாய்மர படகு அணி மட்டும் அங்கு சென்றிருக்கிறது. இதைத்தொடர்ந்து மற்ற குழுக்கள் தொடர்ச்சியாக செல்லும்.ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் வருமாறு:-
வில்வித்தை (4 பேர்)
அதானு தாஸ், பிரவீன் ஜாதவ், தருண் தீப் ராய் (ஆண்கள் ரிகர்வ் தனிநபர் மற்றும் அணிகள் பிரிவு), தீபிகா குமாரி (பெண்கள் ரிகர்வ் தனிநபர் பிரிவு). கலப்பு அணிகள் பிரிவில் அதானு தாஸ், தீபிகா குமாரி பங்கேற்பு.
தடகளம் (26)
ஆண்கள்: நீரஜ் சோப்ரா, ஷிவ்பால் சிங் (ஈட்டி எறிதல்), முரளி ஸ்ரீ சங்கர் (நீளம் தாண்டுதல்), தேஜிந்தர் பால் தூர் (குண்டு எறிதல்), எம்.பி.ஜபிர் (400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம்), அவினாஷ் சாப்ளே (3 ஆயிரம் மீட்டர் ஸ்டிபிள் சேஸ்), குர்பிரீத் சிங் (50 கி.மீ நடை பந்தயம்), சந்தீப் குமார் , ராகுல் ரோலினா, இர்பான் (20 கி.மீ நடை பந்தயம்), முகமது அனஸ், அமோஜ் ஜேக்கப், ஆரோக்கிய ராஜீவ் , நாகநாதன் பாண்டி, நிர்மல் டாம் (48* 400 மீட்டர் தொடர் ஓட்டம் ).
பெண்கள் : டூட்டி சந்த் (100 மற்றும் 200 மீட்டர் ஓட்டம்), கமல்பிரீத் கபூர், சீமா புனியா (வட்டு எறிதல்), அன்னு ராணி (ஈட்டி எறிதல்), பிரியங்கா கோஸ்வாமி , பாவ்னா ஜாட் (20 கி.மீ நடை பந்தயம்). 4*400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் சர்தக் பாம்ப்ரி, அலெக்ஸ் அந்தோணி , தனலட்சுமி ரேவதி, சுபா ஆகியோர் பங்கேற்பு.
பேட்மின்டன் (4)
சாய் பிரனீத் (ஆண்கள் ஒற்றையர்), பி.வி.சிந்து (பெண்கள் ஒற்றையர்) , சத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி (ஆண்கள் இரட்டையர் ).
குத்துச்சண்டை (9)
ஆண்கள் : அமித் பன்கல் (பிளை வெயிட்), மணிஷ் கவுசிக் (லைட் வெயிட்), விகாஸ் கிருஷ்ணன் (வெல்டர் வெயிட்) ஆசிஷ் குமார் (மிடில் வெயிட்) , சதீஷ்குமார் ( சூப்பர் ஹெவி வெயிட்), பெண்கள்: மேரி கோம் (பிளை வெயிட்), சிம்ரஜித் கபூர் (லைட் வெயிட்), லவ்லினா (வெல்டர் வெயிட்), பூஜா ராணி ( மிடில் வெயிட்).
குதிரையேற்றம் (1)பவுசத் மிர்ஸா ( ஆண்கள் தனிநபர் பிரிவு ) வாள்சண்டை (1) சி.ஏ. பவானிதேவி (பெண் கள் தனிநபர் சேபர் பிரிவு ).
ஆக்கி (38)
ஆண்கள்: ஸ்ரீஜேஷ், ஹர்மன் பிரீத், ருபீந்தர் பால்சிங், சுரேந்தர் குமார், அமித்ரோகிதாஸ், பிரேந்திர லக்ரா, ஹர்திக்சிங், மன்பிரீத் சிங், விவேக் சாகர் பிரசாத், நீலகண்டசர்மா, சுமித், ஷாம்சர்சிங்,தில்பிரீத் சிங், குர்ஜந்த்சிங், லலித் குமார் உபாத்யாய், மன்தீப்சிங். (3 மாற்று வீரர்கள்)பெண்கள்: சவீதா புனியா, தீப் கிரேஸ்ஏகா, நிக்கி பிராதன், குர்ஜித்கவூர், உதிதா, நிஷா , நேகா கோயல், சுசிலா சானு, மோனிகா, நவ்ஜித்கவூர், சலீமா தீதி, ராணி ராம்பால் , நவ்னீத் கவூர், லால் ரேஷ்மி, வந்தனா கத்ரியா, ஷர்மிளா தேவி.(3 மாற்று வீராங்கனைகள்)
கோல்ப் (3)
அணிர்பன் லக்ரி, உதயன் மானே (ஆண்கள் தனிநபர்), அதிதி அசோக் (பெண்கள் தனிநபர்).
ஜிம்னாஸ்டிக் (1)
பிரானதி நாயக் (பெண்கள் ஆர்ஸ்டிக் ஆல்ரவுண்டு பிரிவு).
ஜூடோ (1)
சுஷீலா லிக்மபம் (பெண் களுக் கான 48 கிலோ பிரிவு).
துடுப்பு படகு (2)
அர்ஜூன் லால் , அரவிந்த் சிங் (ஆண்கள் லைட் வெயிட் இரட்டையர் ஸ்குல்ஸ் )
பாய்மர படகு (4)விஷ்ணு சரவணன் (ஆண்கள் லேசர் பிரிவு), கே.சி. கணபதி , வருண் தாக்கர் (ஆண்கள் 49 இ.ஆர். பிரிவு), நேத்ரா குமணன் (பெண்கள் லேசர் ரேடியல் பிரிவு).
துப்பாக்கி சுடுதல் (15)
ஆண்கள்: சவுரப் சவுத்ரி, அபிஷேக் வர்மா (10 மீட்டர் ஏர் பிஸ்டல்), பஜ்வா, அகமது கான் (ஸ்கீட்), தீபக்குமார், பன்வார் (10 மீட்டர் ஏர் ரைபிள்), சஞ்சீவ் ராஜ்புத், அஸ்வாரி தோமர் (50 மீட்டர் ரைபிள் 3 பொஷிசன்).
பெண்கள்: மனுபாக்கர்(10 மீட்டர் ஏர் பிஸ்டல், 25 மீட்டர் பிஸ்டல்), யஸ்வினி தேஷ்வால் (10 மீட்டர் ஏர் பிஸ்டல்), ராகி சரன்பத் (25 மீட்டர் பிஸ்டல்), அபூர்வி சண்டிலா, இளவேனில் வாலறிவன் (10 மீட்டர் ஏர் ரைபிள்), அஞ்சும், மோட்கில், தேஜஸ்வினி சவாந்த் (50 மீட்டர் ரைபிள் 3 பொஷிசன்).
நீச்சல் (3)
ஸ்ரீகாரி நடராஜன், சாஜன் பிரகாஷ் (ஆண்கள்), மானா படேல் (பெண்கள்).
டேபிள் டென்னிஸ் (4)
சரத்கமல், சத்யன் (ஆண்கள் ஒற்றையர்), மனிகா பத்ரா, சுதிர்தா முகர்ஜி (பெண்கள் ஒற்றையர்). கலப்பு இரட்டையர் பிரிவில் சரத் கமல், மனிகா பத்ரா பங்கேற்பு.
டென்னிஸ் (3)
சுமித் நாகல் (ஆண்கள் ஒற்றையர்), சானியா மிர்சா, அங்கிதா ரெய்னா (பெண்கள் இரட்டையர்).
பளு தூக்குதல் (1)
மீராபாய் சானு (பெண்கள் 49 கிலோ பிரிவு).
மல்யுத்தம் (7)
ஆண்கள்: ரவிகுமார் தகியா (57 கிலோ பிரிவு), பஜ்ரங் புனியா (65 கிலோ பிரிவு), தீபக் புனியா (86 கிலோ பிரிவு).பெண்கள்: சீமா பிஸ்ரா (50), வினேஷ் போகத் (53), அசுமாலிக் (57), சோனம் மாலிக் (62).