சிறுதானியங்களில் பல்வேறு சுவையான ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று உருளைக்கிழங்கு, தினை மாவு சேர்த்து பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
தினை மாவு – 2 கப்
உருளைக்கிழங்கு – 2
கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
இந்துப்பு – சிறிதளவு
நெய் – 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
உருளைக்கிழங்கை வேக வைத்து தோலை நீக்கி நன்றாக மசித்துக்கொள்ளவும்.
அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, இந்துப்பு, நெய், கொத்தமல்லி தழை ஆகியவற்றை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
தினை மாவை கலந்து பூரி பதத்துக்கு பிசைந்து கால் மணி நேரம் ஊற வைக்கவும்.
மாவு பிசைவதற்கு உருளைக்கிழங்கை வேகவைத்த தண்ணீரை சிறிதளவு சேர்த்துக்கொள்ளலாம். பின்னர் சிறு உருண்டைகளாக உருட்டி பூரிகளாக தேய்த்தெடுத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பூரிகளை போட்டு மொறுமொறுப்பாக பொரித்தெடுக்கவும்.
சூப்பரான தினை உருளைக்கிழங்கு மசாலா பூரி ரெடி.