Loading...
குற்றவியல் புலனாய்வுத் துறை (சிஐடி) காவலில் உள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாமென்ற சந்தேகத்தில் நேற்று கொழும்பில் உள்ள தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று காலை தனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக ரிஷாத், சிஐடி அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவிற்கு (OPD) அழைத்துச் சென்றனர். வைத்தியர்களால் பரிசோதிக்கப்பட்ட பின்னர், ரிஷாத், அவசர சிகிச்சை பிரிவில் (ETU) அனுமதிக்கப்பட்டார்.
Loading...
தற்போது, ரிஷாத் இருதயவியல் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் எக்கோ கார்டியோகிராம் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
Loading...