புதிது புதிதாக சிகிச்சைகளை கண்டுபிடித்து அதனை பின்பற்றுவதில் ஜப்பானியர்கள் கை தேர்ந்தவர்கள். அப்படி ஒரு சிகிச்சை தான் Otonamaki சிகிச்சை. அதாவது சுவாசிக்க கூடிய வகையில் துணிக்குள் சுமார் 20 நிமிடங்கள் நம்மை கட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.
ஜப்பான் நாட்டை சேர்ந்த Nobuko Watanbe என்ற பெண்மணி தான் முதல் முதலாக இந்த சிகிச்சையை கண்டுபிடித்துள்ளார். இவருக்கு குழந்தை பிறந்தபோது, தனது குழந்தையை ஒரு துணியால் சுத்தி வைத்துள்ளார். இதனால் தனது குழந்தையின் உடல் வலுப்பெறுவதை தெரிந்துகொண்டார். அதன்படியே இந்த சிகிச்சை தானும் மேற்கொண்டுள்ளார்.
எவ்வாறு செய்வது? சுவாசிக்கக்கூடிய வகையில் ஒரு துணியினை எடுத்துக்கொண்டு, அதனை உங்களது உடலோடு சுற்றி கட்டிக்கொள்ளுங்கள். மிகவும் அழுத்தமான முறையில் கட்டக்கூடாது. சுமார் 20 நிமிடங்கள் இந்த துணிமூட்டைக்குள் நீங்கள் இருந்தால் உடங்கள் உடலில் ஏற்படும் மாற்றத்தை உணர்வீர்கள்.
ஏற்படும் மாற்றம் என்ன? மன அழுத்தத்தை குறைக்கும். உங்கள் இடுப்பு, கால் மற்றும் தோள்பட்டை தசைகளை நெகிழ்வாக்கும். மேலும் கழுத்துவலி மற்றும் முதுகுவலிக்கும் தீர்மானம் தரும். இந்த சிகிச்சையை அந்நாட்டில் அதிகமானோர் பின்பற்றி வருகின்றனர்.
இருப்பினும் இந்த சிகிச்சை குறித்து பிசியோதெரபி நிபுணர் Vishwanathan Ravi கூறியதாவது, இவ்வாறு செய்வதால் உங்கள் உடல்களில் ஏற்படும் தசை பிரச்சனைகளுக்கு மிக குறுகிய காலத்தில் தீர்வு கிடைக்காது. எனவே, இதனை மீண்டும் மீண்டும் செய்யும்போது முதுகெலும்பு பிரச்சனை ஏற்படும் என கூறியுள்ளார்.