ஆடுகள் தொடாத இலை என்பதால் இந்த இலை ஆடாதோடா இலை என்று அழைக்கப்படுகிறது. இதன் மருத்துவப் பெயர் Adhatoda Zeylanica ஆகும். இந்த தாவரம் சிறு செடியாகவும் அல்லது மரமாகவும் இருக்கும். இதனுடைய இலைகள் மாமர இலைகளை போன்றே இருக்கும்.
ஆடாதோடா இலையில் வாசிசின் என்னும் மருத்துவகுணம் வாய்ந்த வேதிப் பொருள் உள்ளது. எனவே இது பல நோய்கள் தீர்க்கும் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
ஆடாதோடை இலையுடன் தேன் கலந்து சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்: நமது உடலின் தசைப்பகுதியில் ஏற்படும் வலிகள், மஞ்சள்காமாலை, ரத்தகொதிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு ஆடாதோடை இலையை பறித்து காயவைத்து, பின் அதை கஷாயம் செய்து குடித்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
ஆடாதோடை இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை வடிகட்டி அதனுடன் தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால், சளி, இருமல், தொண்டைக்கட்டு, காய்ச்சல், ஆஸ்த்துமா போன்ற பிரச்சனைகள் தீரும்.