யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். எடுத்த காரியத்தை முடிக்கப் பெரும் பிரயாசை எடுப்பீர்கள். உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசிநேரத்தில் கையை விரிக்கலாம். பிறருக்குப் பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.
கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். காரிய வெற்றிக்கு மாற்று இனத்தவர்கள் ஒத்துழைப்பு உண்டு. உறவினர்கள் வருகையால் உள்ளம் மகிழ்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். ஆரோக்கியம் சீராகும்.
உற்சாகத்துடன் செயல்படும் நாள். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும். குழந்தை களின் வழியில் உதிரிவருமானம் உண்டு. வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.
மகிழ்ச்சி கூடும் நாள். முயற்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகு வர். பணத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். நாட்டுப் பற்றுமிக்க ஒருவரால் வீட்டுப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வீர்கள்.
தொழில் போட்டிகள் அகலும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்று வீர்கள். காவல்துறை சம்பந்தப்பட்ட வகையில் ஏற்பட்ட மனக் கலக்கம் அகலும். பணியாளர்களின் பக்க பலமாக இருப்பர்.
விவாகரத்தால் ஏற்பட்ட விவ காரங்கள் அகலும் நாள். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்திணையும். செய்தொழிலில் லாபம் குவிக்க வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும்.
தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் நாள். வரன்கள் வாயிற் கதவைத் தட்டும். கனிவாகப் பேசுபவர்களின் எண்ணிக்கை கூடும். வீடுமாற்றம்இ நாடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.
பணத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். கொடுத்தவாக்கைக் காப் பாற்றுவீர்கள். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப் பர். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும்.
விரயங்கள் கூடும் நாள். நேற்றைய சேமிப்பு இன்று செல விற்கு கைகொடுக்கும். நண்பர் களின் உதவியோடு தொழிலில் வளர்ச்சியைக் காண்பீர்கள். இட விற்பனையால் லாபம் உண்டு.
விரோதிகள் விலகும் நாள். வாங்கல் – கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். தந்தை வழி உறவினர்களால் தன லாபம் கிடைக்கும்.
நல்ல தகவல் இல்லம் தேடிவரும் நாள். தடைகள் விலகி தனலாபம் பெருகும். கொடுத்தவாக்கைக் காப் பாற்றி மகிழ்வீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். திருமண முயற்சி கைகூடும்.
முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுக்கும் நாள். நேற்றைய பணி இன்றும் தொடரும். குழந் தைகளின் விருப்பங்களை நிறை வேற்றுவீர்கள். உத்தியோக மாற்றம் உறுதியாகும்.