இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்ட மேலும் 10 பிரதான நபர்கள் பற்றிய விபரங்களை கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை, அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிடம் கடிதம் ஊடாக வழங்கியிருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இந்த தகவலை வெளியிட்டார்.
உயிர்த்த ஞர்யிறு தாக்குதலுக்கு நீதிகோரி கொழும்பு பேராயர் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை அண்மையில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார்.
அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்ட மேலும் பலரது விபரங்கள் அடங்கிய கடிதத்தையே அனுப்பிவைத்திருந்ததாக கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.